உண்டு என்போருக்கு உண்டு என்று முழங்கிடும்
பெரியவர்களின் மொழிகள் பொய்த்திடுமோ?

உள்ளதை உள்ளபடி காட்டிடும் கண்ணாடி போன்ற
கன்னங்களுடைய உன் மேனியைக் காண
வாடிடும் என் அருகினில் இன்னும் வராதது ஏனோ?

உண்டு என்போருக்கு உண்டு என்று முழங்கிடும்
பெரியவர்களின் மொழிகள் பொய்த்திடுமோ?

உறக்கம் துறந்து, யாழினை மீட்டி,
தூய உள்ளத்தினில் சுத்த ஸ்வரத்துடனும்,
வேளை தவறாமல் பஜனை செய்யும்
உன் தொண்டர்களை நாளும் காப்பாற்றும்
தயையுள்ளம் பெற்றவன் நீயன்றோ?
தியாகராஜனால் போற்றப் பெற்றவனே!

உண்டு என்போருக்கு உண்டு என்று முழங்கிடும்
பெரியவர்களின் மொழிகள் பொய்த்திடுமோ?

இது சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவாரான தியாகராஜர் என்னும் ஏழையின் கீர்த்தனம்.

அவரிடம் பொருள் ஏதும் இருந்ததில்லை, ஆனால் இராமனை போற்றிப் பாடாத நாளில்லை.

அவரன்பு இராமனை தூக்கிப்போட்டதில் அவர் கதறியது காவிரி  அறியாததில்லை.

அந்த காவிரி பாயும் தமிழகம் மட்டும் மறந்ததேனோ?