ஓங்கி வளர் முராரி புகழ்!
குஞ்ச வனம் திரிபவன் எழில்!

அசுரன் மதுவை வதம் செய்த மாதவா,
கருணைக் கடலே, கேசவா
உனக்கென் வணக்கங்கள்!

ராச நடனம் ரசிக்கும் இறையே,
லீலைகள் உன்னிடம்,
மாயைகள் என்னிடம்…

கோபியர் கொஞ்சும் ரமணா,
சாந்த சொரூபியே மதுசூதனா,
உன்னைக்காண அடியவர்
ஒருசில அடிகள் வைத்தாலும்
கருணையுடன் தரிசனம் தருவாயே!

என்றும் இளம் வதனம் கொண்டவா,
சந்திர மலர் முகம் கொண்ட
கோபியர் இதயம் கவர் நாதா,
கோவர்தன மலை தூக்கிய இறைவா,
பிருந்தாவனம் எங்கும் உன் குழலிசை –
எங்கெங்கும் எம் பரம்பொருளின் நிறை.

ராதையின் நாயகன், கம்சனையோ வதைத்தவன்,
நின் பாதத்தில் சரணடைகிறேன்,
தஞ்சம் கிடைக்காதோ அந்த பாத
விரல் நகக் கண்களில்?
உன் பட்டாடை போல்
என்னை சுத்தம் செய்யும் ஜனார்தனா,
உன் பாதமலர் சரணம்.

மேலெழுதிய வரிகளின் மூலம் ஜெயதேவரின் ‘அஷ்டபதி’ யில் ஒன்றாகும்.
சமஸ்கிருதத்தில் அவருடைய கீத கோவிந்தம், கோகுலக் கண்ணன் கோபால கிருஷ்ணன் புகழ் பாடும் உன்னத காவியம்.

‘ஏஹி முராரே குஞ்ச பிஹாரே’ என்று தொடங்கும் இந்த பாடலை பாம்பே ஜெயஸ்ரீயின் மனம் உருக்கும் குரலில் கேட்டு மகிழலாம் இங்கே.

B._Jayasree_-_Saalokhyam_-_02_ehi_muraare
Hosted by eSnips

முன்பே பார்த்த அஷ்டபதி – ‘சந்தன சர்சித நீல களேபர…’