பச்சை வெளிதனில்
பகலவன் அருளினில்
அச்சம் இல்லாமல்
நித்தம் மலரும்
ரோஜா மலரும்

என்னைப் பார்த்து சொன்னது
அருளின்றி மலராது அகம்
அதனாலே நீசெய் தவம்
உன் அறிவே சிவம்
அதை நீநாடு தினம், என்று!

ஆன்றோர் வாக்கின் துணையில்
அம்புலி புனை பெருமான்
என்னுள்ளே என்னுள்ளே
எங்கிருக்கிறான் எனத்தேடி
எங்கும் இருக்கிறான்
என அறியும் நாள் எந்நாளோ?