பாலாழியில் படுத்துறங்கும் பரமா, பாமர தயாளா,

அர்சவதாரம் போதும், அரச்சனை செய்யும் எனக்கருள்வாய்!

முக்குறும்பு நீங்கிட, முக்தி பெற்றிட அருள்வாய்!

என் பிணிகள் நீக்கிடும் குருவாய் நீ வருவாய்!

கடல் நிற வண்ணா, கொள்வாய் என்மேல் கடலளவு கருணை!

கார்மேக வண்ணா, பொழிவாய் என்மேல் மழைபோல் அருளை!

முக்தி தரும் நகர்களில் முக்கியமாய் கச்சிதனில் அருளும் வரதா,

விசிறி ஏந்தி நிற்கும் கச்சி நம்பி போற்றும் அத்திகிரி வரதா,

வாராதோ உனக்கென்மேல் கருணை,

அடைந்தேன் உன் தாள் தனில் சரணே!