பா 31:

அவித்தையா லானவை யாகமுதற் காணும்

இவை குமிழிபோலவழி வெய்தும் இவற்றின்

அயலாம் அமலவகம் பிரம்மமாம் என்றறி

யராமல் என்றும் அறி.

விளக்கம்:

இரண்டு வகையானவர்கள் – ஒரு வகை : அவித்தைகளால், இறையை வெளியே அங்கும் இங்கும் எங்கும் தேடி அலைபவர்கள் – இவர்கள் நீர்க்குமிழிபோல் எளிதில் உடைந்துவிடும் இயல்பு கொண்டுள்ளவர்கள். இன்னொரு வகை: தம் அப்பழுக்கற்ற தூய்மையான அகமே பிரம்மம் என அறிந்தவர்கள். அவ்வாறு பிரம்மம் என்றறிந்தவர்கள் அந்த அறிவில் இருந்து எந்த மாறுதலும் அடையாதவர்கள்.

அவித்தை: உபாதிகளால் ஏற்பட்ட மயக்கத்தினால், நான், எனது என்கிற ஈகோ ஏற்படக் காரணமாகிறது. அவ்வாறு ஆன்மாவில் விளையும் உபாதி, அவித்தை எனப்படுகிறது. பாசி பிடித்த குளத்தில், மேலே இருக்கிற சூரியனின் பிம்பம் தெரிவதில்லை. ஆனால், தெளிந்த நீருடைய குளத்திலோ, பிம்பம் தெளிவாகத் தெரிகிறது. குளத்தில் இருக்கும் பாசி போலத்தான் அவித்தைகளும். அவற்றை அகற்றினால், தெள்ளத் தெளிவாகத் தெரியும் சச்சிதானந்தம்.

மனதின் குணங்களுக்கும் ஆன்மாவிற்கும் நேரடித் தொடர்பேதும் இல்லாமல் இருத்தல் வேண்டும். அதனை அடுத்த பாவில் பார்ப்போம்:

பா 32:

உடலுக்கு வேறெனக் குண்டா தன் மூத்த
லோடுகுன்றல் சாவுமுதலொன்றா – படர்ந்த
வொலிமுதற் புலன்களோடு ஒன்றல் எனக்கின்றே
யலன்பொறிகளாய் ஆனத லால்.

விளக்கம்:

உடல் வேறு தான் வேறு என உணர்ந்த ஆன்மாவிற்கு – மூப்பில்லை, சோர்வில்லை, இறப்புமில்லை – இப்படியாக உடலுக்கு நிகழும் மாறுதல்கள் ஏதுமே பிரம்மத்தை உணர்ந்த ஆன்மாவுகில்லை. உடலின் அவையங்களோடான ஒன்றுதல் நான் என்ற அகங்காரத்தினையே தந்திடும். ஆதலால் ஆன்மா, ஒலி முதலான புலன்களில் ஏற்படும் உணர்வுகளோடு ஒட்டுதல் இல்லாமல் இருந்திடும்.

———————————————————————————————
ஆத்ம போதம்: முந்தைய பகுதிகள்