பா 35:

ஆகாயம் போல அகிலத்தினுள் வெளியான்

சாகாதான் சர்வ சமன் சித்தன் என்றேகாதி

யாவட்றும் பற்றற்றான் என்றும் அமலன் சலியான்

அவன் நானென்றே அறி.

விளக்கம்:

உள்ளேயும், வெளியேயும் எங்கெங்கும் பரவி இருக்கும் அண்ட வெளி போலானவன் வன்.

சாகாதான் – இறப்பில்லான்.
சர்வ சமன் – எல்லாவற்றிலும் சமமாக இருப்பவன்.
சித்தன் – விட்டு விடுதலை ஆகி நிற்பவன்.

உடல் தொடங்கி எல்லாவற்றிலும் ஒட்டுதல் அற்றவன் வன்.

எந்த விதத்திலும் குறைவோ அல்லது மாற்றமோ அடையாதவன் வன்.

அப்படிப்பட்ட அந்த வன் என்னும் பிரம்மமாய் நான் இருக்கிறேன் என்று அறிவாய்.

———————————————————————————————-
“அகத்தில் பிரம்மமாய் இருக்கிறேன்” என்று எளிதாக சொல்லி விடுகிறோம், பிரம்மம் என்பது எப்படிப்பட்டது – எவ்வளவு பிரம்மாண்டமானது என்பது பாருங்கள்!
நினைவாலும் அளக்க இயலா எல்லைகளில் நிஜமாகப் பரவி இருக்கிறது அந்த பிரம்மாண்டம்!

அப்படிப்பட்ட பிரம்மாண்ட பிரம்மம் எப்படிப்பட்டது?
அடுத்த பா சொல்கிறது:

பா 36:

எது நித்தஞ் சுத்தம் எது முக்தம் ஏகம்

எது அகண்ட இன்பம் இரண்டலது எது சத்துச்

சித்தானந்தம் ஆகுன் திகழ்ப் பரபிரம்ம

வத்து யானேயா மதி.

விளக்கம்:
எது எப்போதும் சுத்தமாய், தூய்மையாய் இருக்கிறதோ,
எது எப்போதும் முக்தி அடைந்ததாய், எல்லாவற்றிலும் ஒன்றாய் இருக்கிறதோ,
எது எல்லா இடத்திலும் அகண்டு பரந்து இருக்கிறதோ,
எது பேரின்ப பெருங்களிப்பு தருகிறதோ,
எது அத்வைதமாய் இரண்டல்லவென்று இருக்கிறதோ,
எது அளவிட இயலாத சத் – சித் – ஆனந்தமாக இருக்கிறதோ,
– அந்த அது – பிரகாசமாய் ஒளி விட்டுத் திகழும் பிரம்மம்,
அது நான், நானேதான்.

———————————————————————————————
ஆத்ம போதம்: முந்தைய பகுதிகள்