பா 37:

நிரந்தரம் இவ்வாறு நிகழ்த்தப்படும் அப்

பிரம்மமே யான் அவனென்னும் உறுதி

அழிக்கும் அறியாமை அலைவுகளை நோய்கள்

ஒழிக்கும் இரசாயனம் ஒத்து.

விளக்கம்:
யானே அவன் – யானே பிரம்மம் என்று கொள்ளும் அந்த அசைக்கமுடியாத உறுதியினால்
சத்-சித்தினில் தொடர்ந்து நிரந்தரமாய் தெரியும் ஒளியின் பிம்பம்.
எப்படி இரசாயன மருந்தினை உட்கொண்ட உடன் அது தணிக்கும் நோய்கள் அது அழிப்பது போல,
அறியாமையினால் ஏற்படும் தடுமாற்றங்களை அந்த உறுதி அழித்திடுமாம்.

——————————————————————————-

உறுதி என்கிற சொல்லாடலை கவனிக்கவும்! (நம்பிக்கை மட்டுமல்ல, உறுதி, அசைக்க முடியாத உறுதி).
இரசாயனம் – பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது, பேரின்பம் அன்றுள்ளே. மற்ற மருந்துகள் உள்ளுக்குத் தின்றாலும் வல்லே வல்லே என்றே…

நிரந்தரமாய் நிகழ்த்தப்படும்: – தொடர்ந்து ஒரு ஆன்மீக சாதகன் யோகத்தினில் ஆழ்ந்து தன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கிற பிரம்மத்தினை தொடர்ந்து திரும்பிப் பார்த்துக் கொண்டே இருப்பானேயானால், அந்த பிரம்மத்தின் பிம்பத்தினை தன் அகத்தில் திகழ்வதனைக் காணுவான்.

ஒரு ஆன்மீக சாதகன் எப்படி தியானம் செய்ய வேண்டும் என்று அடுத்த பா சொல்கிறது.

பா 38:

ஏகாந்த தேசத் திருந்தாசையின்றி வெளி

போகாது வென்று பொறிகளை – ஏகமா

அந்தமி லான்மாவை அன்னியமில்(லா) புந்தியானாய்ச்

சிந்திக்க வேண்டுதன் தெரி.

விளக்கம்:
ஏனையவரின் அருகாமையில்லாத தனியானதொரு இடத்தில்,
ஆசைகள் ஏதுமில்லாமல்,
மனது அகத்தை விட்டு வெளியே போகாது கட்டுப்படுத்தி,
ஐந்து புலன்களையும் வென்று,
முடிவில்லாத ஆன்மாவில் இடராத கவனத்தை நிறுத்தி,
தன்னை விட்டு வெளியே இல்லாத உயர் ஞானத்தினை அடைய,
இரண்டென்றில்லாமல் ஒன்றாய் (ஏகமாய்) ஆன்மாவைக் கருதி தியானிக்க வேண்டும்.

———————————————————————————————
ஆத்ம போதம்: முந்தைய பகுதிகள்