என்ன நடக்கிறது, என்னைச் சுற்றி இருப்பவை என்னவையாய் இருக்கிறது?

எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கும் அந்த நீல வானம், ஒளிர் விடும் ஆதவன், அழகான நீர்நிலை அல்லது இனிமையான சோலைவனம் – இப்படியாக நாம் இரசிக்கும் நல்ல விஷயங்களையெல்லாம் – இவற்றை அருகே சென்று தொட்டுப் பார்க்க இயலுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அதற்கு எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்? எவ்வளவு ஓட வேண்டும்?

மனிதன் வாழ்வதே சந்தோஷத்திற்காகத்தான். அந்த சந்தோஷம், இப்போது, இங்கேயே கிடைக்கக் கூடியது. எங்கேயும் தேடிப் போக வேண்டாம். எவ்வளவு தூரமும் ஓட வேண்டாம். இங்கேயே, இப்போதே, இந்தச் செயல் செய்யும்போதே கிடைக்கக் கூடியது.
ஜென் துறவி திச் நாட் ஹான் சொல்லுவதைக் கேளுங்க:

ஒரு காகித்தை கையில் எடுத்துக் கொள்ளுங்கள், அதில் உங்களுக்கு என்ன தெரிகிறது?

மேகங்கள் தெரிகிறதா? ஆம், திச் நாட் ஹான் அவர்களுக்கோ, மேகங்கள் தெரிகிறதாம், அவரே சொல்கிறார் பாருங்கள்:

நீங்கள் கவிஞராய் இருக்கக்கூடின்,
மேகக்கூட்டங்கள் உலவிக்கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள் –
இந்தக் காகித் தாளினில்.
மேகங்கள் இல்லாமல், மழை இல்லை.
மழை இல்லாமல், மரங்கள் இல்லை.
மரங்கள் இல்லாமல், நம்மிடம் காகிதம் இருப்பதில்லை.
ஆகவே, இதோ மேகம் இங்கே இருக்கிறது.
மேகமும், காகித்தாளும், ஒன்றுக்கொன்று மிக அருகே…
மரத்திற்கு சூரிய வெளிச்சம் தேவை – அது மரமாய் இருக்க.
இந்தக் காகிதத்தாளை உற்று நோக்கினால்,
அதில் மேகமும்,
சூரிய வெளிச்சமும் மட்டுமல்ல,
ல்லாமும் இருப்பதும் தெரிந்திடும்.