யாழ்ப்பாணத்து சுவாமிகளும், நந்திநாத சம்பிரதாயத்தின் கைலாச பரம்பரையின் 161ஆவது குருவுமான சிவயோக சுவாமிகளின் பாடல்களான “நற்சிந்தனை” என்கிற தொகுப்புலிருந்து ஒரு பாடல்:

ன்பு சிவமென்ற ஆன்றோர் திருவாக்கை

இன்பமுடன் போற்றியிருப்பது எக்காலம்?

தி அந்தமில்லாத ஆன்மாவை நாமென்ற

சேதி அறிந்து தெரிவிப்பது எக்காலம்?

ம்மையிலும் மறுமையிலும் எம்மைவிட்டு நீங்காத

செம்மலர் தாள்கண்டு சீவிப்பது எக்காலம்?

சன் திருவடியை என்றும் மறவாமல்

வாச மலர்கொண்டு வணங்குவது எக்காலம்?

ருகி யுருகி உணர்விழந்து நின்று

பெருகி வருமமிழ்தைப் பருகுவது எக்காலம்?

ரும் பேருமல்லா ஒருவன் திருவடியை

நீரும் பூவும்போட்டு நெக்குநிற்ப தெக்காலம்?

ல்லா உயிரினும் நில்லாமல் நிற்பவனை

நினைந்து நினைத்துருகி நிற்பதுவு மெக்காலம்?

க னேக னிறைவனடி வாழ்கவெனும்

மோக மறுக்குமொழி கண்டுய்வ தெக்காலம்?

ந்து புலன்வென்ற ஆன்றோர் திருவடிகீழ்

நைந்துருகி நின்று பெறுவதெக்காலம்?

ன்றென் றிருதெய்வம் உண்டென் றிருவென்று

அன்றுசொன்ன பட்டினத்தா ரடிபணிவ தெக்காலம்?

மெனு மெழுத்தினுள்ளே ஒளியதாய் விளங்குகின்ற

சோமசுந் தரத்தின் அடிதொழுவ தெக்காலம்?