இராமனுக்கு தாலாட்டுப்பாடும் ஸ்ரீஇராம ஹிருதயம் நிறையும் தியாகராஜர் தாலாட்டுகிறார்!
தன் நெஞ்சம் முழுதும் நிறையும் அன்பின் நிறைவில் தாலாட்டு பாடுகிறார்!
கேட்போமா இந்த இதயம் இனிக்கும் தாலேலோவை!

பல்லவி

ஜோ ஜோ ராமா ஆனந்த
கன ஜோ ஜோ ராமா ராமா
(ஆனந்த வடிவோனே தாலேலோ…)

சரணம்
(1)
ஜோ ஜோ தசரத பால ராமா
(தசரத மைந்தா தாலேலோ…)
ஜோ ஜோ பூஜா லோல ராமா
(நிலமகள் காதலா தாலேலோ…)

(2)
ஜோ ஜோ ரகு குல திலக ராமா
(ரகுகுல திலகனே தாலோலோ…)
ஜோ ஜோ குடில தராலக ராமா
(சுருள் முடியானே தாலேலோ…)

(3)
ஜோ ஜோ நிர்குண ரூப ராமா
(குணங்களுக்கு அப்பாற்பட்டவனே தாலேலோ…)
ஜோ ஜோ சுகுண கலாப ராமா
(எல்லா நற்குணங்களும் நிறைந்தவனே தாலேலோ…)

(4)
ஜோ ஜோ ரவி சசி நயன ராமா
(சூரியனும் சந்திரனும் கண்ணானவனே தாலேலோ…)
ஜோ ஜோ பணி வர ஸயன ராமா
(அரவணையில் சயனித்தருப்பவனே தாலேலோ…)

(5)
ஜோ ஜோ ம்ருது தர பாஷ ராமா
(இன்மொழியானே தாலேலோ…)
ஜோ ஜோ மஞ்சுள வேஷ ராமா
(இனிய திரு உருவத்தானே தாலேலோ…)

(6)
ஜோ ஜோ த்யாகராஜார்சித ராமா
(தியாகராஜன் அர்சிக்கும் ராமனே தாலேலோ…)
ஜோ ஜோ பக்த ஸமாஜ ராமா ஜோ ஜோ!
(பக்தர்கள் குழுமத்தில் நிறை ராமனே தாலேலோ…)

இராகம் : ரீதி கௌளை (இந்த ராகம் ஞாபகம் இருக்கா, ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்…’ என Dr. பாலமுரளி கிருஷ்ணா பாடுவாரே!, அதே ராகம்.)

அருணா சாய்ராம் அவர்கள் இங்கே பாடியிருப்பதைக் கேட்கலாம். அந்தச் சுட்டியில் முழு பாடலையும் கேட்க இயலாதவர்கள்,
இங்கே பாம்பே சகோதரிகள் சற்றே துரித காலத்தில் பாடுவதைக் கேட்கலாம்.